“நான் கல்விக்கு தகுதியில்லாதவன்” கடிதம் எழுதிவிட்டு 11ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

24354

சிதம்பரம்…..

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ள கேஆர்எம் நகரில் வசித்து வருபவர் ஜானகி. இவரது மகன் 16 வயது ஜீவா. இவர் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் இவர் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இதனால் கடுமையாக மன உளைச்சலில் இருந்து வந்தார். ஏற்கனவே 10ம் வகுப்பில் குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தார்.

11ம் வகுப்பில் எடுத்துக் கொள்ளலாம் என கஷ்டப்பட்டு படித்தார். ஆனாலும் அவரால் மார்க் வாங்க முடியவில்லை. இதனால் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஜீவா விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்.

அந்த கடிதத்தில், தன்னோட அம்மாவும் பாட்டியும் தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்ததாகவும் , 10ம் வகுப்பு படிக்கும் போது குறைந்த மதிப்பெண் எடுத்திருந்ததால், 11ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறேன் என கூறி இருந்ததாகவும்,

இந்த முறையும் மதிப்பெண் குறைந்ததால் கல்விக்கு தகுதி இல்லாதவன் ஆகிவிட்டேன். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இந்த கடிதம் மற்றும் தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.