பிக்பாஸ் சீசன்4……….

தமிழ் பிக்பாஸ் சீசன்4 எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

அதிலும் முக்கியமாக போட்டியாளர்கள் யார் யார் இருப்பார்கள் என்றே இன்னும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இதையடுத்து, ஏற்கனவே பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயர் பிக் பாஸில் கலந்து கொள்வதாக பல செய்திகள் வெளியானது.

ஆனால், தற்போது அதை மறுத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவறான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன். நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை. நன்றி என்று கூறியுள்ளார்.















