நீருக்குள் தவறி விழுந்த 2 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி.. விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது சோகம்!!

311

தமிழகத்தில்..

ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் மக்கள் விநாயகருக்கு பூஜை செய்து விட்டு தாங்கள் வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பர்.

அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக நடைபெறுவதுபோல் இந்த முறையும் மக்கள் வழிபட்ட விநாயகர் சிலையை, ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ கரைத்து மகிழ்ந்தனர்.

இந்த சூழலில் விநாயகர் சிலையை கரைக்க நண்பர்களுடன் சென்ற 2 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மேட்டூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ளது தொட்டில்பட்டி என்ற பகுதி. இங்கு சந்தோஷ், நந்தகுமார் என்ற 14 வயது சிறுவர்கள் தங்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.


அருகில் இருக்கும் அரசு உதவி பெரும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவர்கள், விநாயகர் சதுர்த்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

அந்த வகையில் தொட்டில்பட்டி 16 கண் உபரி நீர் ஓடையில் இன்று விநாயகர் சிலையை கரைக்க நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரும் ஆழமான பகுதிக்கு தெரியாமல் சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில் திடீரென நீர் அதிகமானதால் 2 சிறுவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தாங்கள் நீரில் மூழ்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த அவர்கள் நீச்சல் தெரியாததால், கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஒரு சிலர் அதனை கவனித்து சுதாரித்து காப்பாற்றுவதற்குள் 2 சிறுவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உயிரிழந்த 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.