நெடுஞ்சாலையோரம் சடலமாக கிடந்த பாஜக தலைவி : பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்!!

1026

அஸ்ஸாம்…

அஸ்ஸாம் மாநிலம் கோபால்புரா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜோலினி நாத். இவர் அம்மாவட்ட பாஜக செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கோபால்புரா மாவட்டம் சல்பரா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜோலினி நாத் இன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு திடீர் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் சடலத்தை கைப்பற்றி தீவிரவிசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் உயிரிழந்த பென் பாஜக தலைவி ஜோலினி நாத் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜோலினி நாத் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஜோலினி நாத்தை படுகொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக தலைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.