நொடிப்பொழுதில் வெடித்த அதிநவீன ரொக்கெட்!

389

சீனாவின் குய்சோ – 11 ரொக்கெட் விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று ஆண்டு கால தாமதத்திற்கு பின்னர் குய்சோ – 1A என்ற ராக்கெட்டை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பத்துடன் புதிய ரொக்கெட் தயாரிக்கப்பட்டது. இதற்கு குய்சோ – 11 என்று பெயரிடப்பட்டது. இந்த செயற்கை கோள் 2.2 மீட்டர் விட்டதையும், 700 தொன் எடையையும் கொண்டது.

இந்த ரொக்கெட்டை பூமியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் சூரியனின் சுற்றுப்பாதையில் 1000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடியும்.

சீனாவின் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை கழகத்தின் துணை நிறுவனமான எக்ஸ்பேஸ் டெக்னாலஜி நிறுவனம் இந்த ரொக்கெட்டை உருவாக்கி இருந்தது.


இதையடுத்து குய்சோ – 11 ரொக்கெட் இரண்டு செயற்கைகோள்களுடன் பீஜிங் நேரப்படி 12: 17 மணிக்கு வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ரொக்கெட் தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் பயணத்தை தொடங்கிய ஒரு சில நிமிடத்தில் நிலை தடுமாறி குய்சோ -11 வானத்தில் வெடித்து சிதறியது.

இதற்கான காரணம் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.