மிழகத்தில்…………………….

தமிழகத்தில் உயிரிழந்த 7 வயது மகனின் சடலத்துடன் தாய் 3 நாட்கள் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருக்கும் திருநின்றவூர் சிடிஎச் சாலையில் ரேவதி என்பவர் வசித்து வருபவர். இவர் கணவர் ஜீவாந்தமிடம் இருந்து பிரிந்து 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கொரொனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் தனது மகன் சாமுவேல் பசி, பட்டினியால் இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சரஸ்வதி தகவல் அளித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சரஸ்வதி வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அதில் 7 வயது சிறுவன் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுவன் உயிர் இழந்து 3 தினங்களுக்கு மேல் ஆன நிலையில் எந்த தகவலையும் சொல்லாமல் அவரது தாய் சிறுவனின் உடலுடனே வசித்து வந்துள்ளார்.
உண்மையில் சிறுவன் பசியால் உயிர் இழந்தானா அல்லது சரஸ்வதியே கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.















