படிக்க பிடிக்கல… பெற்றோருக்கு கடிதம் எழுதி கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

259

திருநெல்வேலியில்..

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ஸ்டீபன் டேவிட். இவரது மகள் சரோஜ் பெனிட்டா . இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் 3ம் ஆண்டு படித்து வந்தார். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி சரோஜ் நேற்று காலை வகுப்பிற்கு செல்லாமல் விடுதிஅறையிலேயே தங்கிவிட்டார்.

பிற்பகலில் சக மாணவர்கள் அறைக்கு திரும்பி வந்துபார்த்தனர்.அவரது அறையில் பெற்றோருக்கு எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. கடிதத்தில் விருப்பம் இல்லாத படிப்பில் சேர்த்துவிட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.அப்போது சரோஜ் பெனிட்டா தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.‌ பின்னர் கல்லூரி ஊழியர்கள் மாணவி சரோஜை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் மாணவி சரோஜ் பெனிட்டா உடலைக் கைப்பற்றி,


வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சரோஜ் பெனிட்டாவிற்கு அதிக அரியர்கள் இருந்ததும், அவருடன் படித்த சக மாணவர்கள் 5ம் ஆண்டு படித்து வருவதால் இவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.