படுக்கையறை வீடியோவால் விபரீதம்… மகளின் முன்னாள் காதலனை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற பெற்றோர்!!

585

தெலுங்கானா…

தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியாலாவில் வசித்து வந்தவர் மகேஷ் (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

ஒரு சந்தர்ப்பத்தில், தனது காதலியுடன் தனிமையில் படுக்கையறையில் இருப்பதை மகேஷ், அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் மகேஷுக்கும் அந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மகேஷூடனான காதலை முறித்துக் கொண்ட பெண், அதன் பின்னர், மகேஷூடனான தொடர்பையும் துண்டித்துள்ளார்.


அதனை ஏற்றுக் கொள்ளாத மகேஷ், தன்னை காதலிக்க வேண்டும் எனத் தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர், அவருக்கு வேறொரு இளைஞருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் மிகவும் கோபம் அடைந்த மகேஷ், அந்த இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது மனைவி காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்த இளைஞர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் தற்கொலைச் செய்து கொண்ட பின்னரும் மகேஷ் அந்த இளம் பெண்ணை விடவில்லை. விரட்டி விரட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டுமெனத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து அந்த இளம் பெண் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுத்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் மகேஷுக்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு வர வேண்டுமென அழைத்துள்ளனர். அந்த இடத்திற்கு வந்த அவரிடம் இளம்பெண்ணின் பெற்றோர்,

தங்களது மகளுக்குத் தொல்லைத் தர வேண்டாம் என்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை முற்றிப் போனதால் இளம்பெண்ணின் பெற்றோர் நடுரோட்டிலேயே மகேஷை வெட்டிக் கொலைச் செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே மகேஷ் துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மகேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.