பரிதாபமாக பலியான கல்லூரி மாணவி… கதறித்துடித்த பெற்றோர்: சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

721

புதுச்சேரியில்..

புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெங்கு அறிகுறி இருந்ததனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வெளியான மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், மாணவி டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவில் அய்யனார் மற்றும் சோனியா தம்பதியினரின் 4 வயது மகன் ரக்‌ஷன் டெங்குவால் செப்டம்பர் 10-ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.