அஞ்சலி..

போட்டோ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த அஞ்சலி, ஜீவா ஜோடியாக கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, அங்காடி தெரு & எங்கேயும் எப்போதும் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் பேவரைட் ஆன அஞ்சலி, இந்த படங்களுக்கு விருதுகளை வாங்கினார். இதன் மூலம், திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

இதற்கு பல விருதுகளையும் வாங்கிய இவர், படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பு, அழகு, துணிச்சலான பாவனை என காட்டி ரசிகர்களை தனது வலையில் சிக்கவைத்தார்.

திடீரென சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரெச்சனைகள் காரணமாக சினிமா பக்கம் வராது இருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர்,

சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதன் மூல, பட வாய்ப்புகளை பெற தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டு வருகிறார்.
















