பள்ளி அளவில் முதலிடம்.. டிகிரி முடித்து வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

5912

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்தவர்கள் முருகன்- சுபா தம்பதியர்கள். இவர்களின் மூத்த மகள் ஸ்வேதா (21). சென்னை செம்மஞ்சேரியில் உள்ளதனியார் கல்லூரி ஒன்றில் கடந்த ஆண்டு பி.காம் பட்டபடிப்பு முடித்த இவர், பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் எதிலும் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று அம்பத்தூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் நேர்முக தேர்வுக்கு சென்ற ஸ்வேதா, அங்கும் வேலை கிடைக்காததால் மனமுடைந்து வீடு திரும்பியுள்ளார். நிறுவனங்களின் தொடர் நிராகரிப்பால் வாழ்க்கையின் மீது விரக்தியில் இருந்த ஸ்வேதா தாய் சுபாவிடம், தொலைபேசியில் பேசிவிட்டு உறங்குவதாக கூறி அறைக்கு சென்றுள்ளார்.

அறைக்கு சென்று வெகுநேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் சுவேதா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் உடனடியாக ஆவடி காவல் ஆணையரக திருமுல்லைவாயல் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயில் காவல் துறையினர் ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் சுவேதா பள்ளி அளவில் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் தங்கை நல்ல நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இதனால் வீட்டிற்கு மூத்தவளாக இருந்தும் ஏதும் செய்ய முடியவில்லை என்ற மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்வேதா வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.