மதுரை..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கரையப்பட்டியை சேர்ந்தவர சகிதா பேகம். இவரும் இவரது சகோதரி உறவு முறையான வகிதாபானுவும் மேலூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் துணிக்கடை அருகே குடியிருக்கும் 11ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி (ஓரினச்சேர்க்கை) பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மேலூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த சகிதாபேகம் மற்றும் அவரது சகோதரி வகிதா பானு ஆகிய இருவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்த மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்க நகைகள் திருடு போனதும், நகையை சிறுமி எடுத்து சகிதா பேகத்திடம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர், சகிதா பேகத்தை பிடித்து விசாரித்தபோது, அவரின் செல்போனில் சிறுமியுடன் திருமணம் செய்துகொண்ட புகைபட காட்சிகள் மற்றும் சிறுமியுடன் அந்தரங்கமாக இருக்கும் புகைப்படகாட்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே சிறுமியை இவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி, குழந்தைத் திருமணம் செய்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் இதற்கு உடந்தையாக அவரது சகோதரி வகிதாபானு இருந்துள்ளார். இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது















