பள்ளி வேனில் இருந்து இறங்கிய மாணவிக்கு நடுவீதியில் நடந்த பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

422

கேரளா..

கேரளா மாநிலம் மலப்புரத்தில் வீட்டின் அருகே சாலையைக் கடக்கும் போது 10 வயது சிறுமி ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஷஃப்னா ஷெரின்.

இவர் பள்ளி முடிந்து மதியம் 1 மணியளவில் பள்ளிப்பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி ஷெரின், வீட்டின் அருகில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது சற்றும் எதிர்பாராமல் திடீரென குறுக்கே வந்த ஆட்டோ சிறுமி மீது வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பள்ளி பேருந்தின் உரிமம் மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதனிடையே இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.