பாஜக தலைவர் இந்த்ராணி தற்கொலை.. பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

552

இந்த்ராணி..

அஸ்ஸாம் மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் இந்த்ராணி தபில்தர்.இவரை குறித்த சர்ச்சை பதிவுகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இந்நிலையில் இந்த்ராணி கௌகாத்தியில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன .

இவருக்கு வயது 46. இவர் பாஜக விவசாயப் பிரிவு, வர்த்தக அமைப்புகள் உட்பட பல்வேறு மட்டங்களில் உயர் பொறுப்புகளை வகித்து வந்தவர். இந்த்ராணியின் அந்தரங்க புகைப்படங்கள் பலவும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன.

அதில் இந்த்ராணியுடன், மாநில பாஜகவின் மற்றொரு ஆண் பிரபலமும் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் இந்த்ராணியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்.

இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு நீடித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அந்தரங்க புகைப்படங்களை யார் சமூக வலைதளங்களில் வெளியிட்டது யார் பதிவிட்டது என்பதுகுறித்த தகவல்கள் தெரியவில்லை.


இந்த்ராணியின் தற்கொலை குறித்து கௌகாத்தி போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்தரங்க படங்கள் குறித்து காவல்துறைக்கு புகார்கள் எதுவும் வரவில்லை . ’ஏதேனும் மிரட்டல் காரணமாக இந்த்ராணி தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டாரா’

என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாமில் பெண்கள் பாதுகாப்பு குறித்து முதல்வரான ஹிமந்த் பிஸ்வ சர்மா அடிக்கடி பெருமிதம் தெரிவிப்பவர். தற்போது இந்த்ராணி தற்கொலை விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.