
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.

இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதே போல் கொரோனா அரசியல் பிரமுகர்களையும் விட்டுவைக்கவில்லை. தமிழக ஆளுநர் புரோஹித்,

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், டெஸ்ட் எடுத்துள்ளார்.

அதில் அவருக்கு பாசிட்டீவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.















