பாத்ரூமுக்கு ஒன்றாக குளிக்கச் சென்ற காதல் ஜோடி சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?

1274

கர்நாடகா..

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் குளியல் அறையில் விஷ வாயு தாக்கி காதல் ஜோடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டேலுபேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர். இதேபோல் கோகாக் டவுன் பகுதியை சேர்ந்தவர் சுதாராணி ஆவார்.

இவர்கள் 2 பேரும் பெங்களூரு நந்தி மலை அருகே ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தனர். அப்போது, நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பெற்றோரும் காதலை ஏற்றுக் கொண்டு திருமண நிச்சயம் செய்து வைத்தனர்.

சந்திரசேகர் சிக்கஜாலஹள்ளி அருகே தரபனஹள்ளியில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சுதாராணி கடந்த 10-ந் தேதி சந்திசேகரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் வீட்டின் குளியல் அறையில் உள்ள நீர் சூடேற்றும் கருவியை ஆன் செய்தார். பின்னர், அவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக குளித்ததாக கூறப்படுகிறது.


இந்த சமயத்தில் அந்த கருவியில் திடீரென கோளாறு ஏற்பட, அதில் இருந்து விஷ வாயு கசிய தொடங்கி உள்ளது. அதை கவனிக்காத 2 பேரும், அந்த காற்றை சுவாசித்ததால், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கழிவறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடியிருந்தனர் மற்றும் கீசரில் இருந்து கார்பன் மோனாக்சைடை உள்ளிழுத்ததால் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் இறந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஹோட்டல் ஊழியர்கள் அவர்களைத் தேடி வந்தனர், பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் இருந்து எந்த பதிலும் வராததால், காவல்துறையை அழைத்தனர்.

போலீசார் கதவை உடைத்து திறந்து பார்த்தனர், பின்னர் கழிவறையில் சடலங்கள் கிடந்தன. பின்னர் போலீசார் காதல்ஜோடியின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.திருமணம் நிச்சியக்கப்பட்ட நிலையில் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.