பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த அத்தையை கொடூரமாக கொன்ற இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்!!

546

சென்னையில்..

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவை சேர்ந்தவர் அன்பு(60). இவருக்கு வேளாங்கண்ணி (55) என்ற மனைவியும், மரியம் லாசர் என்ற மகனும், லான்சி என்ற மகளும் உள்ளனர். அன்பு, முத்தமிழ் நகரில் இருக்கும் இரும்பு கம்பெனி ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு வந்த அன்பு, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். அதன் பின், இரவு 8 மணியளவில், அன்புவின் மகன் மரியம் லாரன்ஸ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தலையில் பலத்த காயத்துடன் தாய் வேளாங்கண்ணி இறந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்‌. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குவிரைந்து வந்த கொடுங்கையூர் போலீசார் வேளாங்கண்ணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது,


வேளாங்கண்ணியின் வீட்டிற்கு இரண்டு இளைஞர்கள் வந்து சென்றது தெரிய வந்தது. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் வேளாங்கண்ணியின் கணவர் மற்றும் மகனிடம் காண்பித்து விசாரணை நடத்திய போது அவரது வீட்டிற்கு வந்து சென்ற இளைஞர்களில் ஒருவர் வேளாங்கண்ணியின் தம்பி மகன் அகஸ்டின் அருண் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, நேற்று இரவு அகஸ்டின் அருணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அகஸ்டின் அருண் மற்றும் அவரது நண்பரான சாலமன் ஆகிய இருவரும் கொடுங்கையூரில் உள்ள அகஸ்டின் அருணின் அத்தை வேளாங்கண்ணி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது வேளாங்கண்ணி தனிமையில் இருந்ததை பயன்படுத்திக்கொண்டு அகஸ்டின் அருண் அத்தை என்றுகூட பாராமல் தோள்பட்டையில் கை வைத்து தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வேளாங்கண்ணி, அகஸ்டினை திட்டி விட்டு, இது குறித்து உனது வீட்டில் சொல்கிறேன் என கூச்சலிட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அகஸ்டின் அருண் வேளாங்கண்ணியின் தலைமுடியை பிடித்து தரையில் பலமுறை ஓங்கி இடித்து அவரை மயக்கம் அடைய செய்துள்ளார்.

மேலும் அருகில் இருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து வேளாங்கண்ணியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே வேளாங்கண்ணி உயிரிழந்தார் .

இதன் பின் இருவரும் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலத்தின் அடிப்படையில் கொடுங்கையூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் அருண்(21) மற்றும் நண்பன் சாலமன் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரின் செல்போன்களை சோதனையிட்ட போது, தவறான புகைப்படங்கள் மற்றும் செக்ஸ் வீடியோக்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து இவர்கள் பெண்கள் சம்பந்தமான செக்ஸ் வீடியோக்களை பார்த்து ஏதாவது ஒரு பெண்ணிடம் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு நடந்து கொண்டதை விசாரணையின் மூலம் போலீசார் கண்டறிந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கொலையாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .