பிச்சையெடுத்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய முதியவர்: எவ்வளவு தெரியுமா?

451

பூல்பாண்டி …………….

கொரோனா நிதிக்காக ரூ.1 லட்சம் வரை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் பூல்பாண்டி என்ற முதியவர். தூத்துக்குடியின் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 70), இதுவரை 10 முறை தலா ரூ. 10 ஆயிரம் விதம் 1 லட்சம் ரூபாய் வரை கொரோனா நிவாரண நிதியாக மதுரை கலெக்டர் வினயிடம் வழங்கி உள்ளார்.

இந்த தொகையினை அவர் பிச்சை எடுத்தே வழங்கி உள்ளார், இவரை பாராட்டும் வகையில் கலெக்டர் விருது வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பூல்பாண்டி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் யாசகமாக பெறும் பணத்தை காமராஜர் அவர்களின் பிறந்தநாளன்று அரசு பள்ளிக்கு வழங்குவேன்.

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் கஷ்டப்படும் மக்களுக்கு என்னால் இயன்ற உதவி சென்றடைய வேண்டும் என்பதற்காக மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து 10-வது முறையாக நிதி வழங்கி வருகிறேன்.


விருதுக்காகவோ, பாராட்டுக்காகவோ நான் கொரோனா நிதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா முடியும் வரை தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.