பிரபல தமிழ் சீரியல் நடிகையை மணப்பதாக ஏமாற்றி அவர் பணத்தில் சொகுசு வாழ்க்கை : பின்னர் நடந்த துயரம்!!

4278

தமிழகத்தில்..

திருமணம் செய்வதாக ஏமாற்றி பணத்தை மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராகுல் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் 3 ஆண்டுகள் காதலித்தனர். பின்னர் நடிகையை திருமணம் செய்துகொள்வதாக கூறி கோவையில் நிகழ்ச்சி ஒன்று நடத்துவதற்காக இருவரும் சென்றுள்ளனா்.


அப்போது, கோவையில் உள்ள ஒரு ஹொட்டலில் அப்பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ராகுல் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செய்துள்ளாா்.

மேலும் அப்பெண்ணிடம், 8 லட்சம் ரூபாய், 1.75 சவரன் நகையையும் அவர் பெற்றார். ஆனால், பணம், நகையை திருப்பி தராததுடன், அப்பெண்ணை திருமணமும் செய்யாமல் ஏமாற்றினார்.

இது தொடா்பாக ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்பெண் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த பொலிசார் , ராகுலை கைது செய்தனா்.

இவ்வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ராகுலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.