ஆப்கானிஸ்தானின்…..

ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகி ஹசிபா நூரி . இவருக்கு வயது 38. ஹசிபா நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் 2021 ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் இருந்து தப்பி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹசிபா நூரியின் நண்பரான கோஸ்போ அஹ்மதி,

அவர் உயிரிழந்த தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.ஹசிபாவின் இந்த மரணத்திற்கு அவரது ரசிகர்கள் ,பாடகிகள் , பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

அதில் ஹசிபா நூரியின் மரணம் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் எதிர்கொள்ளும் கடுமையான ஆபத்தை உணர்த்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 14 லட்சம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் மற்றும் கணக்கில் இல்லா ஆவணமற்ற அகதிகள் பாகிஸ்தானில் குடியேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















