பிரபல பெண் நடனக் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் மணந்த அதிர்ச்சி!!

190

மேற்கு வங்காளம் சுந்தரவனம் பகுதியில் இரண்டு பெண் நடனக் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் மணந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டபூர்வமாகத் தற்காலிகம் அங்கீகரிக்கப்படாத நிலையில் இச்சம்பவம் சமூக வட்டாரங்களில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.

சுந்தரவனம் பகுதியை சேர்ந்த ரியா (19) பெற்றோரை இழந்த நிலையில் அத்தை, மாமா பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த ராக்கி (20) என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடன நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். கோவில் திருவிழாவில் முதல் முறையாக சந்தித்த இருவருக்கும் நட்பு உருவாகி பின்னர் அது காதலாக மாறியது.

ஒருவரை ஒருவர் விரும்பிய இருவரும் குடும்பத்திடம் திருமணம் குறித்து தெரிவித்தபோது ரியாவின் குடும்பம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் ராக்கியின் குடும்பம் தங்கள் மகளின் விருப்பத்தை ஏற்று ஆதரவு அளித்தது. இதையடுத்து, கிராம மக்கள் உதவியுடன் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் ரியா மணமகன் உடையிலும், ராக்கி மணப்பெண் அலங்காரத்திலும் பங்கேற்றனர்.


மாலைகள் மாற்றிக் கொண்டு கோவில் முறையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சிலர் ஆரவாரத்துடன் உற்சாகம் தெரிவித்தனர். அதேசமயம், இந்த திருமணம் குறித்து சட்ட ரீதியான கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு இன்னும் சட்ட அங்கீகாரம் இல்லை. இருந்தாலும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இவ்வாறான திருமண நிகழ்வுகள் சில இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், சமூக ஒத்துழைப்பு மற்றும் சட்ட நிலைப்பாடு குறித்து மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது.