பிரபல யூரியூபர் தம்பதியர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

59

பிரபல யூ-ட்யூபர் தம்பதியர், தங்கள் குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பஹதுர்கரில் வசித்து வந்த பிரபல யூ -ட்யூபர் தம்பதியர் கார்விட் (25) மற்றும் நந்தினி (22) ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்கள்.

யூடியூப், ஃபேஸ்புக் போன்றவற்றில் இவர்கள் எடுத்த பல குறும்படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த குறும்படங்களுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்களும் ரசிகர்களாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தங்களது வீட்டின் 7வது மாடியில் இருந்து இருவரும் கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் விசாரணையில், கார்விட் மற்றும் நந்தினி ஆகியோர் தங்கள் குழுவுடன் சில நாட்களுக்கு முன்பு டேராடூனில் இருந்து பஹதுர்கருக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் ருஹீலா ரெசிடென்சியின் ஏழாவது மாடியில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து ஐந்து சக தோழர்களுடன் வாழத் தொடங்கினர். இந்நிலையில், இருவருக்குமிடையே எழுந்த வாக்குவாதம் காரணமாக இந்த தம்பதியர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.


இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.