பிரான்சில் அசத்தி வரும் தமிழ் சிறுமி! ஒரே ஒரு வீடியோவால் குவியும் வாழ்த்துக்கள்: எல்லையற்ற மகிழ்ச்சியில் தாய்!!

310

பிரான்சில்……

பிரான்சில் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிறுமி பாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

உலகில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் தி வாய்ஸ் கிட்ஸ் நிகழ்ச்சியும் ஒன்று, இந்த நிகழ்ச்சியில் திறமையுடையவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், பிரான்ஸில் நடந்த தி வாய்ஸ் கிட்ஸ் நிகழ்ச்சியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனிஷா என்ற சிறுமி இசையமைப்பாளர் இமான் இசையமைத்த சொப்பன சுந்தரி பாடலை பாடினார்.


அவரது குரலால் ஈர்க்கப்பட்ட நடுவர்கள், ஒவ்வொருவரும் தனி தனியாக தேர்ந்தெடுத்து, தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். அப்போது நடுவர்களின் பாராட்டுக்களை கேட்டு, அந்த சிறுமியின் தாயார் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அந்த சிறுமியின் குரலுக்கு இப்போதே நாங்கள் ரசிகர்கள் ஆகிவிட்டோம், விரைவில் திரைப்பட பாடல்கள் பாட வாழ்த்துகிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், குறித்த சிறுமி சுவிட்சர்லாந்தின் Valais என்ற மாநிலத்தில் வசித்து வருவதாகவும், இவர் மூன்று வயதில் இருந்து பாடி வருவதாகவும், சுவிஸ் தமிழர்களால் நடத்தப்படும் எழுச்சிக்குயில் விருதுப் போட்டியிலும் தெரிவாகி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.