பிரான்சில் புதிதாக பரவும் கொரோனா வைரஸ் இந்த வயதினரிடையே அதிகம் பரவுகிறது! எச்சரிக்கை செய்தி..!

348

பிரான்சில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் வழக்குகள் 40 வயதிற்குட்பட்டவர்களிடையே அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது தாக்குதலை ஆரம்பித்ததுள்ளது போல் தோன்றுகிறது. ஏனெனில் பிரித்தானியாவில் சமீப நாட்களாக குறிப்பிட்ட சில பகுதிகளில் நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது மற்றொரு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், புதிததாக மற்றவர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை விட, 40 வயதிற்குட்பட்டவர்களிடமே நான்கு மடங்கு அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் Olivier Veran எச்சரித்துள்ளார்.


ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம், அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் கண்டறியப்படுவது அதிக சோதனைகளால் மட்டும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த நோய் பரவை எதிர்த்து போராடுவதற்கு மீண்டும் ஊரடங்கிற்கான அவசியத்தை நிராகரித்த இவர், கடந்த 24 மணி நேரத்தில் அதாவது சனிக்கிழமையன்று புதித்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3602-ஆக உள்ளது. இது முந்தைய நாளை விட சிறிதளவு உயர்வு என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுவது அதிகரித்து வருகிறது.

இதனால் அதற்கு தேவையான புதிய நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும். குறிப்பாக, சமூக தொலை தூர விதிகளை கடைபிடிக்காமல் நடத்தப்படும் கூட்டங்களால் இப்போது தொற்று நோய் பரவலுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளதாக எச்சரித்துள்ளார்.