பிரித்தானியா தனிமைப்படுத்தல் விலக்கு பட்டியலில் இருந்து நான்கு நாடுகள் நீக்கம்: வெளியான முக்கிய அறிவிப்பு!!

261

பிரித்தானியா………

பிரித்தானியா தனிமைப்படுத்தல் விலக்கு பட்டியலில் இருந்து போர்ச்சுகல், ஹங்கேரி, பிரெஞ்சு பாலினீசியா மற்றும் ரீயூனியன் ஆகிய நான்கு நாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

அதாவது இந்த நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வருபவர்கள் சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, மேம்பட்ட தரவுகளின் மூலம் தீவுகளையும் அவற்றின் பிரதான நாடுகளையும் தனித்தனியாக மதிப்பிடுவதற்கான திறனை இப்போது பெற்றுள்ளோம்.

அசோர்ஸ் அல்லது மடிராவிலிருந்து பிரத்தானியா வந்தால் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.


ஸ்வீடன் தனிமைப்படுத்தல் விலக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் உறுதிப்படுத்தினார், இதன் காரணமாக ஸ்வீடனிலிருந்து பிரித்தானியா வருபவர்கள் தனிமைப்படுத்த தேவையில்லை.

பிரித்தானியா மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க போர்ச்சுகல் (மைனஸ் அசோர்ஸ் மற்றும் மடிரா), ஹங்கேரி, பிரஞ்சு பாலினீசியா.

மற்றும் ரீயூனியன் ஆகியவற்றை தனிமைப்படுத்தல் விலக்கு பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும் என்று தரவு காட்டுகிறது என .போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.