தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு இந்த துயரம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. பாலமுருகனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரை பூனை கடித்துவிட்டது.
பூனைக்கடிக்கு உரிய சிகிச்சை பெறாமல் அலட்சியமாக விட்டதால் பெரிய புண்ணாக மாறியிருப்பதாக தெரிகிறது. ரேபிஸ் தொற்று முற்றிய நிலையில், அதன் தாக்கத்தை தாங்க இயலாமல் இந்த துயர முடிவை எடுத்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
25 வயது பாலமுருகனுக்கு ரேபிஸ் தொற்று முற்றிய நிலையில், தனியார் மருத்துவமனையில் இருந்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
தனி அறையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பாலமுருகன் ரேபிஸ் தாக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.