பெண் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!

1708

திருச்சி..

திருச்சியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், கடன் தொல்லையாலும் நோய்க் கொடுமையாலும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் என்பவரது மனைவியான ஆதிலட்சுமி, நவல்பட்டு நிரந்தர காவலர் பயிற்சிப் பள்ளியில் வார்டனாக பணியாற்றி வந்தார்.

காவலர் குடியிருப்பில் வசித்து வந்த ஆதிலட்சுமி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


ஆதிலட்சுமி சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார் என்றும் கடன் தொல்லையும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது