பெண் தர மறுத்த தந்தைக்கு இளைஞன் செய்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

2051

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் தர மறுத்த தந்தையை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் துளசிநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.

இவருக்கு பிஇ பட்டதாரியான ஒரு பெண்ணும், 12 ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு பையனும் உள்ளனர். முருகேசனின் மகளை கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே ஓசூரைச் சேர்ந்த திலக் என்பவருக்கும் முருகேசனின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனையறிந்த திருமூர்த்தி முருகேசனின் மகளை பெண் கேட்டுள்ளார்.


ஆனால் முருகேசன் பெண் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த திருமூர்த்தி தகராறில் ஈடுப்பட்டதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனை குத்திவிட்டு தப்பியோடி உள்ளார்.

இதில் காயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ஓசூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கெலமங்கலாம் போலீசார்,

வழக்குப் பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்தனர். பெண் கொடுக்க மறுத்த தந்தையை கத்தியால் குத்திய சம்பவம் ஓசூரில் பரபரப்பு ஏற்படுத்தியது.