பெற்றோர்களே உஷார்.. கல்லூரி மாணவி ஷூவுக்குள் இருந்த நல்ல பாம்பு.. நடந்த விபரீதம்!!

1194

கடலூரில்..

கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகள் கடலூரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். 3 நாட்களுக்கு தொடர்ந்து கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்தார். வெளியில் எங்குமே செல்லவில்லை. கல்லூரிதொடங்கவே ஷூ போடலாம் என கிளம்பி ஷூவை கையில் எடுக்கப் போகும் போது தான் பார்த்தார்.

வீட்டின் வெளியே கிடந்த அவரது ‘ஷூ’வுக்குள் பாம்பு ஒன்று புகுந்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பாம்பை விரட்டி பார்த்தனர். முடியவில்லை. அவர்கள் அளித்த தகவலின் பேரில் பாம்புபிடி வீரர் செல்லா வந்து, ஷூவில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.

இரண்டு அடி நீளமுடைய அந்த நல்லபாம்பை, பத்திரமாக மீட்டு அருகில் உள்ள காப்புக்காட்டில் கொண்டுவிட்டுவிட்டனர். ஷூவுக்குள் பாம்பு புகுவதை மாணவி பார்த்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் கூறுகையில்,


பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் பாம்பின் நடமாட்டம் இருந்தால் குழந்தைகள் இருந்தால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பொதுவாக குழந்தைகளின் ஷூ, பை முதலியவற்றை ஒரு முறைக்கு இரு முறை பார்த்து விட்டு, அவர்களிடம் தரலாம் எனக் கூறினார்.