பெற்ற பிள்ளைகளின் கண் முன்னே… அடுத்தடுத்து நடந்த இரு கொடூர சம்பவம்: போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!!

452

வன்கொடுமை…..

பாகிஸ்தானில் 5 வயது குழந்தை வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஒரு வாரத்தில் பெண் ஒருவர் தமது பிள்ளைகள் கண்முன்னே வன்கொடுமைக்கு இலக்கான சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் பிரதான சாலையில் தனது குழந்தைகளுடன் நள்ளிரவு நேரத்தில் பெண் ஒருவர் காரில் பயணித்துள்ளார்.

அப்போது அவரது காரில் எரிபொருள் தீர்ந்து போனதால் அவசர உதவி வேண்டி பொலிசாரை அழைத்து தகவலை கூறிவிட்டு காரின் கதவுகளை அடைத்துவிட்டு காத்துக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு வந்த சிலர் காரின் கண்ணாடியை உடைத்து அந்த பெண்ணையும், அவரது குழந்தைகளையும் சாலையோரம் இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.


மட்டுமின்றி அந்த குழந்தைகளின் கண்முன்னே குறித்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

குறித்த விவகாரம் தற்போது பாகிஸ்தானில் மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள் என மக்கள் போராடி வருகின்றனர். இந்த வழக்கில்

இதுவரை 15க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை குறை கூறியுள்ளார் இந்த வழக்கை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரி.

இது மக்களிடையே மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்து, நீதி நிலை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.