பேர பச்ச குத்திக்கிற அளவுக்கு அன்பு.. தடம் மாறிய காதல்.. நடுரோட்டில் உயிரிழந்த கல்லூரி மாணவி.. அதிர வைத்த காதலன்!!

584

தரணி..

இது ஒரு தலை காதல் எல்லாம் கிடையாது சார்… ரெண்டு பேருமே தான் காதலிச்சாங்க… ஒரு தலைக் காதல்ன்னா எந்த லூசு சார் பொண்ணோட பேர உடம்புல பச்சக்குத்திப்பான்’ என்று அதிர வைக்கிறார்கள் அந்த பகுதியில் இருப்பவர்கள்.

தரணியும், கணேஷூம் காதலித்து வந்தனர். இடையில் கணேஷின் நடவடிக்கைப் பிடிக்காததாலோ வேறு காரணங்களினாலோ காதலைக் கை கழுவியிருக்கிறார் தரணி. பொண்ணுங்களுக்கு இதெல்லாம் சகஜம் சார். ஆனா.

ஆம்பிளை மனசு அப்படி ஏத்துக்காது என்கிறார்கள் கணேஷின் நண்பர்கள். காதலித்தவர் திடீரென வேண்டாம் என சொல்லி விட்டாலோ, பெண்.. காதலிக்க மறுத்தாலோ உடனடியாக அதிரடி வன்முறையில் இறங்கி விடுகிறது இன்றைய இளைய சமுதாயம்.


காதலை ஏத்துக்கலைன்னா யாருக்குமே கிடைக்க கூடாது… அவளை ரயிலில் தள்ளி கொலை செய், உடலை கூறு போட்டு நாய்களுக்கு வீசி எறி, விஷம் வைத்து கொல் என கோதாவில் இறங்கி வன்மத்தை விஷமாக கக்குகிறது.

இது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும் வன்முறை கலாச்சாரம் தொடர்வதை தடுக்க முடியவில்லை. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ராதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுகன். இவருடைய மகள் 19 வயது தரணி. இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

தரணி தனது வீட்டுத் தோட்டத்தில் இருந்த போது, மறைந்திருந்த வாலிபர் ஒருவர் தரணியைப் பின்பக்கமாகப் பிடித்து அவரது கழுத்தை அறுத்து விட்டுத் தப்பி சென்று விட்டார். தரணி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள், வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தரணியின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அத்துடன் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்ட மர்ம நபரையும் தேடி வருகின்றனர். இது குறித்து காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், 25 வயதான கணேஷ் என்ற இளைஞர் தரணியை காதலித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக கணேஷ் கஞ்சாவிற்கு அடிமையானதால் அவருடனான பேச்சை தரணி குறைத்துக் கொண்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கணேஷ் தரணியை கொலைசெய்து இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த கணேஷை காவல்துறை 2 மணி நேரத்தில் சுற்றி வளைத்து கைது செய்தது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.