பைக் ஓட்டிக்கொண்டே இளம்பெண்கள் செய்த முகம் சுழிக்கும் செயல் : வைரல் வீடியோ!!

1421

ஜார்க்கண்ட்டில்..

இன்றைய இளசுகள் சமூக வலைதளங்களில் சாகசத்திற்காகவும், ரீல்சுக்காகவும், ரியல் லைப்பில் பல ஆபத்து நிறைந்த சவால்களை செய்கின்றனர்.

அனைத்தும் சரியாக முடிந்து வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளிவிட்டால் ஓகே தான். ஆனால் பல நேரங்களில் இவை விபரீதங்களில் கொண்டு வந்து முடிகின்றன.

இந்த விபரீத விளையாட்டுக்களை செய்யவேண்டாம் என எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பிரச்சாரங்கள் செய்யப்பட்ட போதிலும் இளசுகள் இவைகளை கண்டுகொள்வதே இல்லை.


அலட்சியப்படுத்தி விடுகின்றனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒரு இன்ஸ்டா பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவில் இளம் பெண்கள் இருவர் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்கின்றனர்.

அதன் பிறகு இருவரும் கட்டியணைத்துக் கொண்டே பைக்கில் பயணம் செய்கின்றனர். பார்க்கும் போதே வயிற்றில் திகில் உறைகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ எங்கு எடுக்கபட்டது என்பது தெரியவில்லை என்ற போதிலும் இன்ஸ்டாகிராமில் ஸ்டார்ஸ் ஆப் ஜார்கண்ட் என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் வீட்டில் போய் முத்தம் கொடுக்க உசிரு முக்கியம், அலப்பறை கூட்டாம பத்திரமா வீடு போய் சேரு. சூப்பர் , கலக்கிட்டீங்க என பல விதமான கருத்துக்கள், சர்ச்சைகள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.