பொண்ணு தேடுறது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.. இளைஞர் போட்ட வேறலெவல் ப்ளான்!!

4145

ஜீவன்..

இந்தியாவைச் சேர்ந்த நபர் திருமணத்திற்கு பெண் தேடுவதை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜீவன் பாச்சு என்ற இளைஞர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் ஆக்ஸ்போர்டு சர்க்கஸின் சென்ட்ரல் பகுதி மற்றும் பேக்கர்லு லைனில் பிரம்மாண்ட விளம்பர பலகைகளை வைத்துள்ளார். அதில் திருமணத்துக்கு பெண் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் 31 வயதான ஜீவன் பாச்சு, இந்த விளம்பரத்திற்காக மட்டும் 2 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் ரூபாய்) செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோட் சூட்டில் ஸ்டைலாக இருக்கும் போட்டோவுடன் ‘உங்களுக்கு ஏற்ற சிறந்த இந்தியர்’ என்ற தலைப்பை கொடுத்துள்ளார். மேலும் ‘Find Jeevan a wife’ என்ற தலைப்பில் கடந்த 2 வாரமாக லண்டனின் பிரதான பகுதிகளில் விளம்பரப்படுத்தி வருகிறார்.


அதுமட்டுமல்லாமல், பெண் தேடும் படலத்திற்காகவே ‘findJEEVANawife.com’ என்ற இணையதளத்தையும் தொடங்கியுள்ளார்.

அந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில், “கோவிட் என்பதால், உங்களை வெளியே தேடுவது கடினமாக உள்ளது. செயலிகளின் பயன்பாடுகளும் குறைந்து வருகின்றன.

நிறைய மெசேஜ் மற்றும் ஸ்வைப் செய்வதை விட நேரில் சந்திப்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டிய சமயம் இது’ என பதிவிட்டுள்ளார்.