
கேரளாவில் 10 வயது மகனை கொலை செய்துவிட்டு கர்ப்பிணி தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆலப்புழாவை சேர்ந்தவர் வினோத். இவர் மனைவி ரஜிதா (30). தம்பதிக்கு வைஷ்னவ் (10) என்ற மகன் உள்ள நிலையில் ரஜிதா மீண்டும் கர்ப்பமானார்.

இந்த நிலையில் வினோத் வீட்டில் இல்லாத சமயத்தில் வைஷ்னவை கொலை செய்த ரஜிதா பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரஜிதாவின் மாமியார் நேற்று காலை அறை கதவை திறக்கும் போது ரஜிதா மற்றும் வைஷ்னவ் சடலமாக கிடப்பதை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றிவிட்டு ரஜிதா எழுதியிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.
அதில், கடன் பிரச்சனையால் என் வாழ்க்கையை முடித்து கொள்கிறேன், நான் போன பின்னர் என் மகன் தனியாக இருந்தால் அவனை யாரும் கவனித்து கொள்ளமாட்டார்கள் என எழுதப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















