மணக்கோலத்தில் அண்ணன்- அண்ணி : தம்பி கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு என்ன தெரியுமா?

10310

மதுரை……

தமிழகத்தின் தன்னுடைய அண்ணன் திருமணத்திற்காக தம்பி கொடுத்த பரிசுப்பொருள் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

மதுரையின் திருமங்கலம் அருகே சுந்தரகுண்டு பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெருமாள்- கலைவாணி.

இவர்களது மூத்த மகன் ராஜாராம் என்பவருக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த அருண்மொழி என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.


இதன்படி நேற்று சொந்த பந்தங்கள், நண்பர்கள் சூழ திருமணம் கோலாகலமாக நடந்த நிலையில், மணமகனின் தம்பி சுப்புராஜ் அவரது நண்பர்கள் இணைந்து மிக வித்தியாசமான பரிசை கொடுத்தனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு காளை ஒன்றையும், ஆட்டுக்கிடா இரண்டையும், சேவல் இரண்டையும் பரிசாக கொடுத்தனர்.

இந்த பரிசு அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க மணமக்கள் காளையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.