மனைவிக்கு போதை மருந்து கொடுத்து விபச்சாரத்தில் தள்ளிய கணவன்… காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா!!

1333

பிரான்ஸ்..

பிரான்ஸ் நாட்டில் உள்ள மசான் நகரில் நடந்த சம்பவம் ஒன்று சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரில் உள்ள பிரபல மாலில், பெண்கள் உடை மாற்றும் அறையில் இருந்து ரகசிய கேமராவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் இது தொடர்பாக டொமினிக் என்பதை கைது செய்தனர்.

அவர் சில ஆண்டுகளாக இதுபோன்று மேலும் சில மால்களில், பெண்கள் உடை மாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் பொறுத்தியிருந்தது தெரியவந்தது. பெண்கள் உடைமாற்றுவதை பார்த்து வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், கேமராவை கைப்பற்றினர்.

ஆனால், இவ்வளவு நாளாக பதிவுசெய்த வீடியோ காட்சிகளை தேடி அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். டொமினிக் வீட்டை சோதனையிட்டபோது, ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான யுஎஸ்பி டிரைவ்களை கைப்பற்றினர்.


அதில் இருந்த பதிவுகளை அவற்றை ஆராய்ந்தபோது, டொமினிக்கின் மனைவி மயங்கி விழுந்தார். அதில் இருந்த அனைத்து வீடியோக்களிலும் டொமினிக்கின் மனைவி, அறிமுகம் இல்லாத நபர்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலமானது. அதாவது மயங்கிய நிலையில் டொமினிக் மனைவி இருக்கும் நிலையில், தினமும் ஒருவர் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்வது பதிலாகி இருந்தது.

இதனை பார்த்து அதிர்ந்த போலீசார், டொமினிக்கை தீவிரமாக விசாரித்தனர். அப்போது, டொமினிக் அடிப்படையில் பாலியல் சார்ந்த மனப்பிறழ்வு கண்டவர் என்பதை உணர்ந்தனர். விபரீத பாலியல் நாட்டம் கொண்ட டொமினிக், அதே போன்றவர்களுக்காக செயல்படும் சமூக வலைதளக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

அந்த குழுவில் ஒவ்வொரு நாளும் புதிதாக அறிமுகம் நபர்களை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர்கள் டொமினிக், மனைவியை பலாத்காரம் செய்யும் காட்சிகளை ரகசிய கேமராவில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்காக இரவில் மனைவியின் உணவில் மயக்க மருந்தான லோராஸெபம் மருந்துகளை கலந்திருக்கிறார் என்பது விசாரணையில் அம்பலமானது.

மனைவி மயங்கியதும் அறிமுகம் இல்லாத அந்த நபரை வீட்டுக்கு அழைத்து மனைவியுடன் உல்லாசமாக இருக்க கேட்டுக்கொண்டுள்ளார். அந்த நபர்களும் அப்பெண் பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூரம் சுமார் சுமார் 10 ஆண்டுகள் தொடர்ந்தது இப்போத அம்பலமாகியுள்ளது. இதுவே சர்வதேச அளவில் அதிர்வை ஏற்படுத்த காரணமாகியுள்ளது.

இதனையடுத்து வீடியோ பதிவுகளின் அடிப்படையில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 25 முதல் 73 வயதுக்குட்பட்ட 51 நபர்களை முதல்கட்டமாக போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.