மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் : வாக்குவாதத்தால் விபரீதம்!!

308

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் 26 வயது சுவாதி. இவர் 2022ம் ஆண்டு சுவாதிக்கு ஜிதேந்தருடன் திருமணம் நடைபெற்றது.

அதிலிருந்து ஜிதேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதிக வரதட்சணை வாங்கி வரும்படி சுவாதியை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் அதிக வரதட்சணை வாங்கி வரும்படி ஜிதேந்தர் சுவாதியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் கூர்மையான ஆயுதத்தால் சுவாதியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுவாதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிதேந்தர், அவரது தாய், தந்தை, சகோதரனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.