மனைவியுடன் கள்ளக்காதல்.. கண்டித்தும் கேட்காத நண்பன் : இறுதியில் நடந்த விபரீதம்!!

1189

சென்னை..

சென்னை பல்லவன் சாலை காந்திநகரை சேர்த்தவர் லோகேஷ்(26). இவர் மீது சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா, தாக்குதலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு திருமணமாகி சத்தியா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த பவுல்ராஜும்(23), லோகேஷும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அடிக்கடி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அப்போது லோகஷ் மனைவி சத்தியா(29) உடன் பவுல்ராஜூக்கு நெருங்கிய நட்பு உண்டாகி பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

கடந்த ஒரு வருடமாக இருவரும் கள்ள தொடர்பில் இருந்து வந்த சம்பவம் லோகேஷ்க்கு தெரியவர மனைவி மற்றும் நண்பனை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து கள்ள தொடர்பில் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த லோகேஷ் கடந்த 7ஆம் தேதி இரவு பவுல் ராஜ் வீட்டருகே நடத்து சென்று கொண்டிருந்த போது அவரை தடுத்து நிறுத்தி கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார்.


இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பவுல்ராஜை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பவுல்ராஜ்க்கு மருத்துவர்கள் தீவிர  சிகிச்சை அளித்து வந்தனர்.

இச்சம்பவம் குறித்து பவுல்ராஜ் சகோதரி கனிமொழி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஷ்சை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தீவிர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பவுல்ராஜ்  உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கை திருவல்லிக்கேணி போலீசார் கொலை வழக்ககாக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.