மனைவியை மார்பில் வெட்டிய கணவர்.. நேரில் பார்த்த போலீஸ் அதிர்ச்சி!!

328

திருத்தணியில்..

திருத்தணி நரசிம்ம சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் 42 வயதான விநாயகம். இவருக்குக் கிரிஜா என்ற மனைவியும், தேவா என்ற மகனும் உள்ளார். இவர்களது மகன் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

தம்பதி இரண்டு பேரும் 14 ஆண்டுகளாகப் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு விநாயகம் குடும்பத்தோடு திருத்தணிக்கு வந்துள்ளார். அங்கு நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் வாடகை வீடு எடுத்துத் தங்கி உள்ளனர். அதன் பின்னர் விநாயகம் கூலி வேலைக்கும், கிரிஜா வீட்டு வேலைக்கும் சென்று வந்துள்ளனர்.

சமீப காலமாக இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட சண்டை உச்சத்திற்குச் சென்றுள்ளது. இதில் கோபமடைந்த விநாயகம் கிரிஜாவைக் கத்தியால் தலை, கை, கால், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது கிரிஜா சத்தம் போட்டுக் கூச்சலிட்டுள்ளார்.


இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் வீட்டின் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் மற்றவர்களால் உள்ளே ஒரு செல்ல முடியவில்லை. இதற்கிடையில் கிரிஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருத்தணி காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

பின்னர் மனைவியைக் கொலை செய்த விநாயகர் கைது செய்து அவரிடம் இருந்த கத்தியைப் பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின்னர் கிரிஜாவின் உடலை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். சாதாரணமான குடும்ப சண்டைக்கு மனைவியைக் கொடூரமாகக் கணவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.