கடப்பா நகரில்..

கடப்பா நகரில் காவல்நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் வெங்டேஷ்வர்லு. இவர் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள கூட்டுறவு காலனியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
வழக்கம் போல் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற வெங்கடேஷ்வர்லு, திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளையும் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், வெங்கடேஷ்வர்லு வீட்டில் சோதனை நடத்திய போது தற்கொலை கடிதம் ஒன்றும் சிக்கியது.

அதில், “ மனைவி, மகள்களுடன் தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாகவும் தனது சொத்துக்களையும் வேலையையும் 2வது மனைவி மற்றும் மகனுக்கு கொடுங்கள்” எனவும் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சகபணியாளர் , “நேற்று இரவு 11 மணி வரை வெங்கடேஷ்வர்லு பணியில் தான் இருந்தார்.

போலீஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகள் இவரது பொறுப்பில் இருந்ததால், அவற்றில் ஒன்றை வீட்டிற்கு எடுத்து சென்று இந்த கொலை மற்றும் தற்கொலைக்கு பயன்படுத்தியிருக்கிறார்” எனக் கூறினார்.
காவல்துறையில் பணிபுரியும் ஒருவர் மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.















