டிரம்ப்………

மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப் தனது முகக் கவசத்தை கழற்றி போஸ் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் மூன்று இரவுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் திங்கட்கிழமை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகை திரும்பினார்.

அவருக்கு வெள்ளை மாளிகையில் கொரோனாவுக்கான சிகிச்சை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மாலை மருத்துவமனயைிலிருந்து வெள்ளை மாளிகை திரும்பும் முன் கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம் என்று அமெரிக்கர்களிடம் கூறிய டிரம்ப், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நான் நன்றாக உணர்கிறேன் என ட்விட் செய்தார்.

மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகைக்கு வந்த டிரம்ப் பால்கனியில் இருந்த படி தனது முகக் கவசத்தை அகற்றி கையை அசைத்தார்.
முகக் கவசம் கட்டாயம் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டிரம்ப் முகக் கவசத்தை அகற்றியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு வீடியோ செய்தியையும் வெளியிட்டார். அதில், மக்கள் மீண்டும் வேலைக்கு திரும்புமாறு வலியுறுத்தினர்.
நீங்கள் கொரோனா வைரஸ் வெல்லப் போகிறீர்கள் என்று கூறிய டிரம்ப், நம்மிடம் சிறந்த மருத்துவ உபகரணங்கள், சிறந்த மருந்துகள் உள்ளன, அனைத்தும் சமீபத்தில் உருவாக்கப்பட்டன.

நாங்கள் முன்னணியில் இருக்கப் போகிறோம், உங்கள் தலைவராக நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது, அதனால் ஆபத்து இருப்பதாக எனக்குத் தெரியும், ஆனால் நான் அதைச் செய்ய வேண்டியிருந்தது. நான் முன்னால் நின்று வழிநடத்தினேன்.
இப்போது நான் நன்றாக இருக்கிறேன், ஒருவேளை நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவனாக இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை.
Donald Trump, who still has an active coronavirus infection, took off his mask after returning to the White House after three nights receiving treatment in hospital. pic.twitter.com/a5McdNngI8
— SBS News (@SBSNews) October 6, 2020
தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார், இருப்பினும் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்கு முன்னர் எந்தவொரு தடுப்பூசியும் பரவலாக கிடைக்காது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் கூறியுள்ளது நினைவுகூரத்தக்கது.















