மாணவனுடன் ஓடிப்போய் காதல் திருமணம் செய்த பேராசிரியை… போலீசில் தஞ்சம் அடைந்த சோகம்!!

1372

நாமக்கல்..

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா(28). இவர், பரமத்திவேலூரில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

நான்கு ஆண்டுகளாக அந்த கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நல்லகுமாரன் பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (24) என்ற மாணவன் அதே கல்லூரியில் படித்து வருகிறார்.

மாணவனுக்கும், பேராசிரியை மீனாக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் அவர்கள் அவ்வப்போது தனியாக சந்தத்து பேச தொடங்கினர்.


இவர்கள் காதல் விவகாரத்தை அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தெரிந்த இருவரது வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால். அதனை பொருட்படுத்தாமல் கடந்த 8ஆம் தேதியன்று இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருவண்ணாமலைக்குச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் இருவரும் நேற்று தஞ்சம் புகுந்துள்ளனர். அதனையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ வழி உள்ளதை கூறினர்.

பின்னர் மாணவன் பிரவீன் வீட்டில் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து பிரவீன், அவரது பெற்றோர்களுடன் கல்லூரி விரிவுரையாளர் மீனாவை அனுப்பி வைத்தனர். மாணவனை காதலித்து விரிவுரையாளர் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.