மாயமான அழகிய இளம்பெண்! குழிக்குள் 6 பேருடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி: முழு தகவல்!!

535

மெக்சிகோ…….

மெக்சிகோவில் மகளை காணவில்லை என பெற்றோர் புகாரளித்த நிலையில், குழி ஒன்றைத் தோண்டும்போது ஏழு சடலங்களுடன் ஒரு சடலமாக அவர் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Yessenia Estefania Alvarado (24) என்ற அழகிய இளம்பெண் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகாரளித்த நிலையில், உண்மையில் அவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது கடத்தப்பட்டுள்ளார்.

ட்ரக் ஒன்றில் வந்த நான்கு பேர் அவரைக் கடத்தியுள்ளார்கள். இதற்கிடையில், குழி ஒன்றைத் தோண்டும்போது அதில் ஏழு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதில் மூன்று பேர் ஆண்கள், மூன்று பேர் பெண்கள், ஒருவரின் உடல் ஆணா பெண்ணா என அடையாளம் காண இயலாத நிலையில் உள்ளது.


அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில், அதில் ஒரு உடல் Yesseniaஉடையது என அவரது உடைகளின் அடிப்படையில் அவரது பெற்றோர் முதலில் அடையாளம் காட்டினார்கள்.

பின்னர் DNA ஆய்விலும் அது Yesseniaதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். Yessenia எதனால் கொலை செய்யப்பட்டார், மற்ற உடல்கள் யாருடையவை என்பது தொடர்பாக எதுவும் தெரியாத நிலையில், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.