மிக ஆபத்தான அடுத்த சிக்கலில் சீனா: கடுமையான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு!!

364

சீனா………

கொரோனா பரவலை சாமர்த்தியமாக முறியடித்துள்ள சீனா தற்போது உணவு பற்றாக்குறையின் விளிம்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது உணவுப் பாதுகாப்பு குறித்த ஒரு மூலோபாய போட்டியைத் தூண்டக்கூடும் எனவும், தைவான் மற்றும் உலகின் பிற பகுதிகளில் பிரச்சனையை தூண்டும் நிலைக்கு ஜனாதிபதி ஜி ஜின்பிங் தள்ளப்படலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

2019 இறுதியில் இருந்தே சீனா கடும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து யாங்சே நதிப் படுகையில் பேரழிவு வெள்ளம் ஏற்பட்டு சீனாவின் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட இழப்புகளும் பொருளாதார ரீதியாக சீனாவை நொறுக்கியுள்ளது.

பெருவெள்ளத்தால் 6 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிர்கள் பாழானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


வெட்டுக்கிளிகள் மற்றும் பிற பிராந்தியங்களில் இராணுவ புழு தொற்றுநோய்களால் நிலைமை மேலும் சிக்கலானது.

கடந்த மாதம் வடகிழக்கு சீனாவில் மூன்று பெரிய சூறாவளிகள் தாக்கியதால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் உணவுப்பொருட்களின் விலையில் 13 சதவீதம் அதிகரித்துள்ளன, பன்றி இறைச்சி விலை 85 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று சீன அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

விவசாயிகள் உணவுப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.