மின்சாரத்தால் ஏற்பட்ட விபரீதம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு ஏற்பட்ட சோகம்!!

418

தமிழகத்தில்..

கன்னியாகுமரி மாவட்டம் சித்தன் விளையை சேர்ந்த தம்பதியினர் ராம் மற்றும் சித்ரா. இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் அஸ்வின் என்ற 17 வயது மகனும் உள்ளனர். இதில், ஆதிரா என்பவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், நேற்று கனமழை பெய்து கொண்டிருந்த போது அஸ்வின் வெளியே கடைக்கு பால் வாங்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அருகே உள்ள தாமஸ் என்பவரின் வீட்டில் உள்ள மின்சார ஒயர் அறுந்து கிடந்துள்ளது. அதில் இருந்து எதிர்ப்பாராதவிதமாக அஸ்வின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது, அவரைக் காப்பாற்ற சென்ற தாய் சித்ரா மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

மேலும், அவர்களை இருவரையும் காப்பாற்ற சென்ற ஆதிராவையும் மின்சாரம் தாக்கியது. இதில், மின்சாரம் தாக்கிய மூவரும் நிகழ்விடத்திலேயே கிடந்துள்ளனர். பின்பு, மழை நின்ற பிறகு அக்கம், பக்கத்தினர் பார்த்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.


ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவலறிந்த பொலிசார், மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.