முகேஷ் அம்பானியின் மாளிகை போன்ற பிரைவேட் ஜெட்டின் விலை இதுதான் தெரியுமா?

1061

முகேஷ் அம்பானி உள்ளிட்ட இந்திய தொழிலதிபர்களின் பிரைவேட் ஜெட்கள் குறித்த ஆச்சரியமூட்டும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் உள்ள வித்தியாசமான நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்திருந்தாலும், மறுபக்கம் பெரும் கோடீஸ்வரர்கள் பலர் இருக்கவே செய்கின்றனர். முகேஷ் அம்பானி போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முகேஷ் அம்பானி இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இது இந்தியாவிற்கு ஒரு பெருமைதான் என்பதில் மாற்று கருத்தில்லை. முகேஷ் அம்பானியை போல் இன்னும் ஏராளமான இந்திய தொழிலதிபர்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர்களாகவும், பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு நேரம் பொன் போன்றது. இவர்களை பொறுத்தவரை ஒவ்வொரு வினாடியும் முக்கியம்.

இதனால் பல்வேறு தொழிலதிபர்கள் சொந்தமாக பிரைவேட் ஜெட் (Private Jet) வைத்துள்ளனர். தொழில் அதிபர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், அவர்களுக்கு பல்வேறு வழிகளிலும் பிரைவேட் ஜெட்கள் உதவி செய்கின்றன. இந்த வகையில் இந்திய தொழில் அதிபர்களின் பிரைவேட் ஜெட்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம்.


லட்சுமி மிட்டலிடம் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி550 (Gulfstream G550) உள்ளது. கல்ஃப்ஸ்ட்ரீம் நிறுவனம் தயாரிக்கும் உலகின் தலைசிறந்த பிஸ்னஸ் ஏர்கிராஃப்ட்களில் இதுவும் ஒன்று. பிரைவேட் ஜெட்களின் ரோல்ஸ் ராய்ஸ் என்று இதனை சொல்லலாம். லட்சுமி மிட்டல் சொந்தமாக வைத்திருக்கும் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி550 பிஸ்னஸ் ஏர்கிராஃப்ட்டின் விலை 38 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

கார்ப்பரேட் பயணங்களுக்கு என குறிப்பாக கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி550 உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 19 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி550 பிஸ்னஸ் ஏர்கிராஃப்ட்டில் 2 ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. 12 மணி நேரம் இடைவிடாமல் நான்-ஸ்டாப்பாக பறக்கும் திறன் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி550 பிஸ்னஸ் ஏர்கிராப்ட்டிற்கு உள்ளது.

ரத்தன் டாடா (Ratan Tata):

உலகப்புகழ் பெற்ற தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவிடம் சொந்தமாக டஸால்ட் ஃபால்கான் 2000 (Dassault Falcon 2000) உள்ளது. இதன் விலை 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த அழகான லக்ஸரி பிஸ்னஸ் ஜெட், பெர்ஃபார்மென்ஸ் மற்றும் எக்கனாமி என இரண்டு அம்சங்களிலும் தலைசிறந்து விளங்குகிறது.

ரத்தன் டாடாவின் டஸால்ட் ஃபால்கான் 2000 லக்ஸரி பிஸ்னஸ் ஜெட்டில் 6 பயணிகள் பயணம் செய்ய முடியும். ரத்தன் டாடா வைத்துள்ள டஸால்ட் ஃபால்கான் 2000 பிஸ்னஸ் ஜெட்டை ஓரளவிற்கு சிக்கனமான செலவில் இயக்க முடியும். அதற்கு ஏற்ப மிகவும் நேர்த்தியாக டஸால்ட் ஃபால்கான் 2000 பிஸ்னஸ் ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி (Mukesh Ambani):

முகேஷ் அம்பானியிடம் போயிங் பிஸ்னஸ் ஜெட் 2 (Boeing Business Jet 2) உள்ளது. இதனை பிபிஜே2 (BBJ2) என்றும் சொல்லலாம். இந்தியாவில் பிபிஜே2 வைத்திருக்கும் ஒரே நபர் முகேஷ் அம்பானி மட்டுமே. இதன் விலை 73 மில்லியன் அமெரிக்க டாலர்கள்! முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவே போயிங் பிஸ்னஸ் ஜெட் 2 வாங்கப்பட்டது.

போயிங் நிறுவனம் கார்ப்பரேட் பயன்பாட்டிற்காக இந்த ஜெட்டை பிரத்யேகமாக தயாரித்துள்ளது. இதில், 78 பயணிகள் பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகம் மற்றும் சொகுசு வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் போயிங் பிஸ்னஸ் ஜெட் 2 தலைசிறந்து விளங்குகிறது. மிகவும் மேம்பட்ட பிளைட் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தை இது பெற்றுள்ளது.

பிரைவேட் ஜெட்டா? அல்லது மாளிகையா? என்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் போயிங் பிஸ்னஸ் ஜெட் 2-வின் இன்டீரியரை நீங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். இதுதவிர பல்வேறு விலை உயர்ந்த கார்களையும் முகேஷ் அம்பானி சொந்தமாக வைத்துள்ளார். அவர் கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.