முதலிரவு என்றால் என்ன… மாணவிகளுக்கு வீடியோ மூலம் விளக்கிய ஆசிரியர்… பின்னர் நடந்த விபரீதம்!!

4002

கோலார்..

கோலார் மாவட்டம் கோலார் தாலுகா நரசாபுரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரகாஷ். இவர் 2 நாளைக்கு முன்பு, தன்னுடைய கிளாஸ்ரூமில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தியிருக்கிறார்.

அப்போது, மு.த.லிரவு என்றால் என்ன? என்று மாணவ-மாணவிகளிடம் கேள்வி கேட்டுள்ளார். பிறகு ஹனிமூன் என்றால் என்ன? என்று கேட்டு, தா.ம்.பத்தியம் குறித்து பேசியுள்ளார். இதைதவிர, மாணவ-மாணவிகளுக்கு ஆ.பா.ச ப.ட.ங்க.ளையும் கா.ண்பித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள், தங்களின் பெற்றோர்களிடம் சொல்லி உள்ளார்கள். அவர்கள் இதற்கு மேல் ஆத்திரம் அடைந்து நேரடியாகவே கிளம்பி ஸ்கூலுக்கு வந்துவிட்டார்கள்.


நடந்த விஷயத்தை கேள்விப்பட்டு அந்த பகுதி மக்களும் திரண்டு பள்ளிக்கு வந்தனர். ஆசிரியர் பிரகாசிற்கு மொத்தமாக சேர்ந்து த.ர்.ம.அ.டி த.ந்தனர்.. பிறகு, ஆசிரியரின் இந்த கேவலமான செயல் குறித்து கோலார் தாலுகா வட்டார கல்வித்துறை அதிகாரி கண்ணய்யாவிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில், கல்வித்துறை அதிகாரி கண்ணய்யாவும், நேரடியாக ஸ்கூலுக்கு வந்து, மாணவ-மாணவிகளிடம் வி.சாரணை ந.டத்தினார். அப்போது கிளாஸ்ரூமில், பிரகாஷின் செயல்பாடுகள் குறித்து மாணவ மாணவிகளே கண்ணய்யாவிடம் சொன்னார்கள்.

இறுதியில், அவர் இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனருக்கு தகவல் கொடுக்கவும், அவரின் அனுமதியின் பேரில் வட்டார கல்வித்துறை அதிகாரி கண்ணய்யா, ஆசிரியர் பிரகாஷை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், எவ்வளவு பெரிய தவறையே செய்திருந்தாலும், சஸ்பெண்ட் ஒன்றுதான் தண்டனையா? என தெரியவில்லை.. இந்த “சஸ்பெண்ட் நடவடிக்கை” என்பது எந்தவகையில்,

இதுபோன்ற குற்றவாளிகளை மாற்றும்? ஒரு இடத்தில் தவறு செய்துவிட்டால், டிரான்ஸ்பர் என்றால், அவர் இன்னொரு இடத்திலும் இதே தவறைதானே செய்வார்? இடம்தான் மாறுபடுமே தவிர, புத்தி கிடையாது..

எனவே டிரான்ஸ்பர் என்பதுடன் மட்டுமே தண்டனையை சுருக்கி கொள்ளாமல், துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு, இதுபோன்றவர்கள் பாடம் நடத்தும் தகுதியே கிடையாது..

அந்தவகையில், இவர்களின் வேலையும் பறிக்கப்பட வேண்டும். ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படியெல்லாம் அட்டகாசம் செய்தால், படிக்கும் பிள்ளைகளை யார்தான் வழிநடத்துவது.