முன்னழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த ரகுல் ப்ரீத் சிங்!!

80

ரகுல் ப்ரீத் சிங்..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் படித்து வளர்ந்தது எல்லாமே டெல்லியில்தான். டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் வர அதில் நுழைந்தார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். தமிழில் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலணி கன்னடத்தில் உருவானது போது அப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் சில படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் ஹிட் அடிக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி அதில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். முன்னணி இளம் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்தார்.

அவ்வப்போது தமிழுக்கு வந்து தீரன் அதிகாரம் ஒன்று ,தேவ், என்.ஜி.கே, ஸ்பைடர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அவரின் ராசியோ என்னவோ அந்த படங்கள் ஓடவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கிடப்பில் போடப்பட்டுள்ள அயலான் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார்.


ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் ஸ்லிம் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ள ரகுல் ப்ரீத் சிங் நடிகர் ஜக்கி பக்னானியை காதலித்தும் வருகிறார். இந்நிலையில், உள்ளாடை அணியாமல் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.