முறையற்ற உறவை தட்டிக்கேட்ட காதலியை கொடூரமாக கொன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்த காதலன்!!

181

கேரள மாநிலத்தில்..

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசிக் (வயது20), பவுசியா (வயது20). இருவரும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர். பவுசியா குரோம்பேட்டை நியூ காலனியில் மகளிர் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி பாலாஜி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.

இந்தநிலையில், பவுசியா மூன்று நாட்களாக கல்லூரிக்குச் செல்லாமல் கேரளாவில் இருந்து வந்த காதலன் ஆசிக்குடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 11 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில், மாலை 4 மணி அளவில், தனக்கும் பவுசியாவுக்கும் தகராறு ஏற்பட்டதால் பவுசியாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக ஆசிக் செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.


இதனைப் பார்த்த பவுசியா உடன் படிக்கும் மாணவிகள் இது சம்பந்தமாக குரோம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த குரோம்பேட்டை போலீஸார், பவுசியாவும் ஆசிக்கும் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பவுசியா பிணமாகக் கிடந்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, பவுசியா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைகாக போலீஸார் அனுப்பி வைத்தனர்.

காதலியைக் கொலைசெய்துவிட்டு தப்பி ஓடிய காதலன் ஆசிக்கை பல்லாவரம் அருகே கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆசிக்கும் பவுசியாவும் 16 வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்ட விவரமும் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த விஷயமும் தெரிய வந்திருக்கிறது.

இந்தத் தகவல் அறிந்த கேரள போலீஸார் ஆசிக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதிலிருந்து ஆசிக் ஜாமீனில் வெளி வந்துள்ளான். இருவருக்கும் பிறந்த குழந்தை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மீண்டும் சென்னையில் இருந்த பவுசியாவைப் பார்க்க வந்திருக்கிறான் ஆசிக். அந்த சமயத்தில், அவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருக்கும் விஷயம் அறிந்து பவுசியா அதிர்ந்து போயிருக்கிறார்.

இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கொலையில் முடிந்திருக்கிறது. நர்சிங் மாணவி ஒருவர் தனது காதலனால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குரோம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.