மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட கேரளாவை சேர்ந்த நபர்! 3வது மனைவி வெளியில் சென்றபோது நடந்த பகீர் சம்பவம்!!

503

இந்தியாவில் மூன்று திருமணம் செய்து கொண்ட நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் சலீம். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பிலி தாமோதரன் என்ற பெண்ணை காதலித்து மணந்தார்.

இந்த தம்பதிக்கு அஸ்லின் என்ற மகன் உள்ளான். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அம்பிலி நோய்வாய்ப்பட்டு இறந்தார். பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஷாம்லா என்ற பெண்ணை சலீம் மணந்தார்.

ஷாம்லாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வேறு ஊரில் பணி கிடைத்தது, இதையடுத்து கணவரை உடன் அழைத்தார்.

ஆனால் சலீம் வர மறுத்த நிலையில் அது தொடர்பில் கணவன் – மனைவியிடையே சண்டை ஏற்பட்டு விவாகரத்து பெற முடிவு செய்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த நிலையில் கடந்த மாதம் 9ஆம் திகதி பசீலா என்ற பெண்ணை சலீம் மூன்றாம் திருமணம் செய்தார். சில தினங்களுக்கு முன்னர் பசீலா தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்த சூழலில் சலீம் தனது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று சலீமின் சகோதரி அவர் வீட்டுக்கு வந்த போது இருவரும் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.